Tuesday, August 27, 2013

தஞ்சையில் த.க.இ.பே. சார்பில், நாளை அறப்போர் ஆவணப்பட வெளியீட்டு விழா!



தமிழ்க் கலை இலக்கியப் பேரவை சார்பில், தஞ்சையில் நாளை (28.08.2013), தமிழீழ விடுதலைக்கான மாணவர் போராட்டத்தை ஆவணப்படுத்தும் “அறப்போர்” ஆவணப்படத்தின் வெளியீட்டு விழா நடைபெறுகின்றது. 

தஞ்சை பெசண்ட் அரங்கில், மாலை 5.30 மணியளவில் நடைபெறும் இவ்விழாவிற்கு தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தஞ்சை செயலாளர் புலவர் கோ.நாகேந்திரன் தலைமையேற்கிறார். தோழர் அ.வில்லியம் வரவேற்புரையாற்ற, நிகழ்வின் தொடக்கத்தில் ஆவணப்படம் திரையிடப்படுகின்றது. 

மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் திரு. பா.பாரதிதாசன் ஆவணப்படத்தை வெளியிட, பொறியாளர் ஜோ.ஜான்கென்னடி, பேராசிரியர் வி.பாரி, திரு. அ.மன்னர்மன்னன், திரு. மா.சீனிவாசன், திரு. க.நலங்கிள்ளி ஆகியோர் பெற்றுக் கொள்கின்றனர். 

ஆவணப்படத்தின் இயக்குநர் திரு. வெற்றிவேல் சந்திரசேகர், ஆவணப்படத்தின் ஒளிப்பதிவாளரும் பத்திரிக்கையாளருமான தி்ரு. மு.நியாஸ் அகமது, தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழ் ஆசிரியர் குழு உறுப்பினர் கவிஞர் கவிபாஸ்கர் ஆகியோர் கருத்துரை நிகழ்த்துகின்றனர். நிறைவில், திரு. க.காமராசு நன்றி கூறுகிறார். 

இந்நிகழ்வில், தமிழுணர்வாளர்களும், தஞ்சை பகுதி வாழ் மாணவர்களும் திரளாகப் பங்கேற்க வேண்டுமென அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்! 

தமிழ்க் கலை இலக்கியப் பேரவை,
செய்தித் தொடர்பகம். 

No comments:

Post a Comment