தஞ்சையில் த.க.இ.பே. சார்பில்
“வியாபாராமாயணம்” நாடகம்
உலகமயச் சூழலில் காணாமல் போன நேர்மையை, மனிதத்தை வெளிப்படுத்தும் விதமாக, முனைவர் மு.இராசாமி எழுதிய “வியாபாராமாயணம்” நாடகம், தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் அரங்கேற்றப்பட்டது.
தமிழ்க் கலை இலக்கியப் பேரவை – முள்ளிவாய்க்கால் முற்ற கலை இலக்கிய வட்டம் ஆகிய அமைப்புகளின் சார்பில், கடந்த 12.12.2013 அன்று மாலை, விளார் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற இந்நாடகத்தில், முனைவர் மு.இராமசாமி, ஆனந்த்சாமி, நெல்லை மணிகண்டன் ஆகியோர் நடித்தனர். திரு. ராஜீவ் கிருட்டிணன் நாடகத்தை இயக்கினார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் வாழ்த்துரை வழங்கினார்.
இந்நிகழ்வில், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தஞ்சை செயலாளர் புலவர் கோ.நாகேந்திரன், தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் திரு. அயனாவரம் சி.முருகேசன், பொறியாளர் ஜான் கென்னடி, பேராசிரியர் பாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். த.க.இ.பே. தமிழகச் செயலாளர் தோழர் நா.வைகறை, நிகழ்வை நெறிப்படுத்தினார்.
இந்நாடகம், தஞ்சை மட்டுமின்றி மதுரை, கோவில்பட்டி, பாளையங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும், கல்லூரிகளிலும் அரங்கேற்றப்படவுள்ளது.
No comments:
Post a Comment