சென்னையில் “வேட்டி” குறும்பட வெளியீட்டு விழா!
தமிழ்க் கலை இலக்கியப் பேரவை நடத்தும், எழுத்தாளர் கி. ராஜநாரயணன் எழுதி, வ.கெளதமன் இயக்கிய ”வேட்டி” குறுப்பட வெளியீட்டு விழா, 13.8.2013 செவ்வாய் மாலை 5.30 மணியளவில் சென்னை அண்ணாசாலை, புக் பாயிண்ட் அரங்கம் (ஸ்பென்சர் பிளாசா எதிரில்) நடக்கயிருக்கிறது.
இவ்விழாவிற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைவர் தோழர் பெ. மணியரசன் தலைமையேற்று உரையாற்றுகிறார். தமிழ்க் இலக்கியப் பேரவை ஒருங்கிணைப்பாளர் தோழர் உதயன் வரவேற்புரையாற்றுகிறார்.
வேட்டி குறும்பட குறுந்தகட்டினை, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் திரு வைகோ வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார். இலயோலா கல்லூரி மாணவர்கள் ஜோ.பிரிட்டோ- செம்பியன் குறுந்தகட்டைப் பெற்றுக் கொள்கிறார்கள்.
இந்திய கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் மூத்த தலைவர் தோழர் இரா. நல்லகண்ணு வாழ்த்துரைக்கிறார். உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கருத்துரை வழங்குகிறார். வேட்டி குறும்பட இயக்குநர் வ. கெளதமன் ஏற்புரை வழங்குகிறார்.
இலயோலா கல்லூரி மாணவர் திரு வெற்றி நன்றி நவில்கிறார். கவிஞர் கவிபாஸ்கர் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்குகிறார்.
இக்குறும்பட வெளியீட்டு விழாவிற்கு, திரைப்படத்துறையினர், தமிழின உணர்வாளர்கள் என அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவேண்டுமாய் அன்புடன் அழைக்கிறோம்.
இன்னணம்
கவிபாஸ்கர்,
செயலாளர், த.க.இ.பே
No comments:
Post a Comment